மரைன்

மரைன்

1980 தசாப்தத்தில் முற்பகுதியில், நாட்டில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தரைவழிச் செயல்பாடுகளைச் செய்யக்கூடிய கடற்படையினர்களின் தேவை அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கடற்படை மற்றும் தன்னார்வத் துறைகளைச் சேர்ந்த மாலுமிகளின் ஒருங்கிணைந்த குழுக்கள் முதலில் நிறுவப்பட்டன, மேலும் அந்தக் குழுக்கள் முதலில் கடலோர மற்றும் நிலப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டன. இலங்கை கடற்படையின் வரலாற்றில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 49 அதிகாரிகள் மற்றும் 3,000 மாலுமிகளைக் கொண்ட முதல் 3 படையணிகளான விஜயபா, வலகம்பா மற்றும் கஜபா ஆகிய படையணிகள் 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன. இந்த படைப்பிரிவுகள் இலங்கை இராணுவ படையணி பயிற்சி நெறியை நிறைவு செய்த பின்னர் ஜயசிகுரு நடவடிக்கைக்கு நியமிக்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டில் மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்த நிலையில், 5,000 கடற்படை வீரர்களைக் கொண்ட கடற்படை காலாட்படை பிரிவு, இலங்கை கடற்படையின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் கடமைகளை மறுசீரமைப்பதற்கான ஒரு முன்முயற்சியாக 2016 ஆண்டு முதல் பாதியில் 45 நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு 300 கடற்படை வீரர்களை கொண்ட முதல் மரைன் படையணி உருவாக்கப்பட்டது.

பின்னர் கடற்படை காலாட்படை பிரிவின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளை படிப்படியாக உள்வாங்கி மரைன் படையணியொன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

2016 செப்டம்பர் 29 ஆம் திகதி அமெரிக்க கடற்படையின் புளூ ரிட்ஜ் கப்பலில் நடைபெற்ற பணியாளர் சந்திப்பின் போது, அமெரிக்கா மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மரைன் படையணி உருவாக்குதல், பயிற்சி மற்றும் இதை நிறுவுதல் தொடர்பான யோசனைகளை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் பிரகாரம், அப்போதைய கடற்படைத் தளபதியின் தொலைநோக்குப் பார்வை நனவாகியதுடன், அதிமேதகு ஜனாதிபதியின் ஆசியுடன், புதிய படையணியாக கடற்படை மரையின் படையணி ஸ்தாபிக்கப்பட்டது. கடற்படையின் நீர்நிலை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியின் மூலம் நிபுணத்துவத்தைப் பெற்றுள்ள மரையின் படையணி கடலோரப் பகுதியில் தனது சக்தியை உறுதிப்படுத்தும் அதே வேளையில் கடலில் இருந்து எந்த வகையான சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டுள்ளது.

அடிப்படை பாத்திரம்

நீர் கடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்தல்

இரண்டாம் நிலைப் பாத்திரம்

கடற்படை தளபதியால் போர் அல்லாத அமைதிக்கால அவசரநிலைகளில் குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை மரைன் படைக்கு வழங்கப்படும். மரைன் படைப்பிரிவு நிலத்திலும் கடலிலும் பரந்த அளவிலான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பங்களிக்க தொடர்ந்து தயாராக உள்ளது.